சென்னை மாநகராட்சி இன்ஜினீயர் ஆடியோ விவகாரத்தில் கல்லூரி மாணவி புதிய விளக்கம்

சென்னை மாநகராட்சி இன்ஜினீயர் ஆடியோ விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவி புதிய விளக்கம் அளித்துள்ளார்.


சமூக வலைதளத்தில் நேற்று ஒரு காதல் ஆடியோ வெளியாகி வைரலானது. அந்த ஆடியோ குறித்து விசாரித்தபோது அது சென்னையில் கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருடன், மாநகராட்சி இன்ஜினீயர் பேசிய உரையாடல் ஆடியோ என்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவி


சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த இடங்களில் ஒன்றான ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்புப் பணியில் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ராயபுரம், மண்ணடி தம்பு செட்டி தெருவில் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதேபகுதியில் மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

போலீஸில் புகார்


கல்லூரி மாணவியை அழகாக இருப்பதாகவும் அவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும் புகழ்ந்த அந்த அதிகாரி, 2 ஆண்டுகளுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் என்னுடைய மனைவி ஆகியிருப்பாய் என ஆடியோவில் இன்ஜினீயர் உருகியிருந்தார்.


இந்த ஆடியோ குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் அளித்தார். பின்னர் அந்த மாணவி தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

மாணவி புதிய விளக்கம்


இந்நிலையில் ஆடியோவில் பேசிய மாணவி இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ஏற்கெனவே ஆடியோ உண்மை கிடையாது. மாநகராட்சி பணியில் நாங்கள் அண்ணன், தங்கையாக பழகி வருகிறோம். இனிமேல் இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸில் புதிதாக மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில், சென்னை இன்ஜினீயர் நல்லவர், என் மீது அக்கறை கொண்டவர். எனது வழிகாட்டி. எனக்கு தெரியாமல் யாரோ ஒருவர் என் செல்போனை திருடி அதில் எனது உரையாடலை திருடி எடிட்டிங் செய்து அவதூறு பரப்பியுள்ளனர். என் எதிர்கால வாழ்க்கையை கேவலப்படுத்தியுள்ளனர். உதவி இன்ஜினீயர் மீது பொய் வழக்கு போடாமலும் என் எதிர்கால நலன் கருதி பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பழைய ஆடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *