சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் ஒரே நாளில் ரூ.3.8 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளில் கொரோனா தடுப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை சென்னையில் 15 மண்டலங்களில் முகக்கவசம் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக ரூ.3.8 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
சென்னையில் இதுவரை மொத்தம் ரூ.2.52 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டூள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.