சென்னையில் ரூ.15 கோடியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

சென்னையில் ரூ.15 கோடியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். 

“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வடிகால்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதன்படி 30 நீர்வரத்து கால்வாய்கள் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன.

பருவமழையை முன்னிட்டு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

இதில் 75 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப் பாதைகளில் 60 உயர்திறன் கொண்ட பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மர அறுவை இயந்திரங்களும் வாகனங்களும் அந்தந்த மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன. 

மாநகராட்சியின் 109 பகுதிகளில் மீட்புப் படகுகள் வைக்கப்பட்டுள்ளன. 176 இடங்களில் நிவாரண மையங்கள், 44 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *