ஒரு மாத சைக்கிள் வாடகை ரூ.999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்மார்ட் பைக் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி 7 நாட்களுக்கு ரூ.299 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.599 ஆகவும், 30 நாட்களுக்கு ரூ.999 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
044- 2664 44440 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் ஸ்மார்ட் பைக் நிறுவன அதிகாரிகள் வீட்டுக்கே வந்து சைக்கிளை வழங்குவார்கள்.
ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தி சைக்கிளை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் விரைவில் 500 மின்சார பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டத்தையும் ஸ்மார்ட் பைக் நிறுவனம் தொடங்க உள்ளது.