தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன. பயிற்றுநர், பயிற்சி பெறுவோர் சானிடைசர் மூலம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கண்டிப்பாக கையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பயிற்சி முடிந்த பிறகு வாகனத்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.வாகன ஓட்டுநர் பயிற்சி பெறுவோரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். வாகனத்தில் 3 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பக்கவாட்டு கண்ணாடிகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடத்தை விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.