ஐகோர்ட்டில் நேரடி விசாரணை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ஐகோர்ட் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்பிறகு ஐகோர்ட், கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது.
தற்போது சென்னை ஐகோர்ட்டின் 6 அமர்வுகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறுகிறது. வரும் 5-ம் தேதி முதல் மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
இந்த தகவலை சென்னை உயர்நீதிமன்ற நீதித் துறை பதிவாளர் ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.