காப்பீடு இல்லாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு… பிறப்பித்துள்ளது.
விபத்து தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
“விபத்து நடந்தவுடன் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு விசாரணை நடத்தப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இந்த இறுதி அறிக்கையை சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை டிஜிபியே உறுதி செய்ய வேண்டும்.
விபத்து வழக்குகளில் சிக்கும் காப்பீடு இல்லாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும். அத்தகைய வாகனங்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக்கூடாது.
மருத்துவம், விபத்து தொடர்பான வழக்குகளுக்கான அறிக்கையை தனித்து தெரியும்விதமாக தனி நிறத்தில் பதிவிட்டு அதையும் 7 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.