இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலை. மீது நடவடிக்கை எடுக்கலாம்

இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலை. மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த இடஒதுக்கீடு முறையை பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களை சேர்த்ததாகவும் இது தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *