கொரோனா வீடுகளில் தகரம் அடிப்பது ஏன்? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் பிரியங்கா வழக்கு தொடர்ந்துள்ளார்.
“எனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இல்லை.
அவரை அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
எங்கள் வீட்டை சுற்றி தகரம் வைத்து அடைத்துள்ளனர்.
இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
அறிகுறிகள் இல்லாதவர்களை கொரோனா மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
வீடுகளில் தகரம் அடிக்கக்கூடாது” என்று வழக்கறிஞர் பிரியங்கா மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
கொரோனை பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.