சென்னை மாநகராட்சியில் ஏதாவது ஒரு பகுதியில் 10 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். ஊரடங்கு தளர்வுகள் அந்த பகுதிகளுக்கு பொருந்தாது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் 132 பகுதிகளில் மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் 3 முதல் 5 பேருக்கு மட்டுமே தொற்று காணப்படுகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக சென்னை உருவெடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தற்போது 2,446 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.