ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்னை மெட்ரோ ரயில்ம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மெட்ரோ ரயில் நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் -சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை, மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 3 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் நிதி, ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.