3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

சென்னை முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-பரங்கிமலை இடையே ரயில் சேவை நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை இமைக்கப்பட உள்ளது. 

இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி  வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலும் மாதவரம் முதல் தரமணி வரையிலுமான வழித்தடத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பாதையில் 3 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *