சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பண்டிகை நாட்கள் வருவதையொட்டி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

இதேபோல வரும் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஓடும். வரும் 29-ம் தேதி இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். நவம்பர் 2-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தொடரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *