5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்

சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“சென்னையில் செப். 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை இடையே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல்-கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ வழித்தட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் செல்ல வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

வரும் 9-ம் தேதி முதல் பரங்கிமலை-சென்ட்ரல் இடையே காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

பிளாட்பாரத்தில் காத்திருக்கும்போதும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போதும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ரயில் நிலைய வாயில்களில் பயணிகள் காலால் இயக்கி கைகளை சுத்தம் செய்யும் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும்.

பயணிகள் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படும். காய்ச்சல் அறிகுறி உள்ள பயணிகள், பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் லிப்ட் பயன்படுத்த வேண்டும்.

டிக்கெட் கவுன்ட்டரில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். அத்துடன் கியூ ஆர் கோடு குறியீடு என்ற செல்போன் டிக்கெட்டும் வழங்கப்படும்.

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சுத்தம் செய்யப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படும்.

வரிசையை தவிர்க்க பயண அட்டையை பரிசோதிக்கும் ரீடர் இயந்திரங்கள் நிறுவப்படும்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *