சென்னையில் நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-21-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேர்வு தள்ளி வைகக்ப்பட்டது.
இந்நிலையில் அக்டோபர் 4-ம் தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அறிவித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக,சென்னையில் நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” சென்னையில் தற்போது காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் யுபிஎஸ்சி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அக். 4 ஞாயிறு மட்டும் சென்னையில் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.