சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பதவியேற்பு

சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால் மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 மாதங்களாக சென்னை போலீஸ் கமிஷனராக  இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் உளவுத் துறை ஏடிஜிபியாகவும் காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி தாமரை கண்ணன், சென்னை சட்டம் ஒழுங்கு ஒழுங்கு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *