சென்னை போலீஸ் புதிய கமிஷனர் யார்?

சென்னை போலீஸ் புதிய கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். சட்ட கல்வி பயின்றவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22- வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார். தேனி எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி, கடந்த 2001-ல் சென்னை பூக்கடை துணை கமிஷனர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி ஐஜியாகவும் மதுரை கமிஷனராகவும் பணியாற்றியிருக்கிறார்.


இவரின் மனைவி தற்போது பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சிபிஐ எஸ்.ஐ-யாகவும் பணியாற்றி உள்ளார்.. இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழக்குகளை துப்பு துலக்குவதில் திறமையானவர். அதனால்தான் அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவகையில் செயல்பட்டார். அதைப் போல மகேஷ்குமார் அகர்வாலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *