வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை விரைவில் திறப்பு

சென்னையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை விரைவில் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 64 கி.மீ. தொலைவுக்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சென்னை-திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. 

தற்போது வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை போக்குவரத்து நடைபெறுகிறது.  இதற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த பின்னணியில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் இடையிலான சாலைப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. எனவே வண்டலூர்-மீஞ்சூர் வரையிலான முழுமையான வெளிவட்டச் சாலை விரைவில் திறக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக சென்னை வெளிவட்டச் சாலையை திறந்துவைப்பார் என்று நெடுஞ்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *