சென்னை மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். வைரஸ் பரவலை தடுக்க கொரோனா பரிசோதனை அதிகரித்து கொண்டே செல்கிறது.
சென்னையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினசரி 5,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
தற்போது நாள்தோறும் 11,000 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் இதுவரை 8.32 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது சென்னை மக்கள் தொகையில் 10% பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.