திருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்?

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2017-ம் ஆண்டு முகநூல் மூலம் கணேஷ் (22) என்பவர் எனக்கு அறிமுகமாகினார். அதன்பிறகு இருவரும் காதலித்தோம்.

5.12.2020-ல் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து எனக்கு கணேஷ் தாலி கட்டினார். எனது பெற்றோரின் சம்மதம் இன்றி நான் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் என் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நான் எனது கணவர் கணேசுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறி விட்டு அவருடன் சென்று விட்டேன்.

அதன்பிறகு, நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து 23.12.2020-ல் வில்லிவாக்கம் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினோம். அன்று இரவே எனக்கு துணையாக சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கணேஷ் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அந்தச் சிறுமியை தன்னுடைய தோழி என்று கணேஷ் எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அந்தச் சிறுமியும் அந்த வீட்டில் தங்கினார்.

அந்தச் சிறுமியும் கணேசும் நடந்து கொண்ட விதம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து கணேஷிடம் கேட்டபோது எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அதனால் கணேஷ், என்னை அடித்து உதைத்தார். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது.

அதையும் மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் வைத்து என்னை பூட்டி சென்றார்.

எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் டார்ச்சர் செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன்.

அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கணேஷ் வற்புறுத்தினார். அவரது வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்தினேன்.

அதன்பிறகு சிறுமி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை அவருடைய நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வீட்டுக்கு வந்தனர். அவர்கள் என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார்.

ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் பொத்தி கடுமையாக சித்ரவதை செய்தார்.

பின்பு கணேஷ் நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை வீடியோ எடுத்தது போல பல பெண்களின் அந்தரங்க வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால் அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன்.

எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் புகாரின் பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர்போலீஸார் கணேஷிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறுமியும் கணேஷிக்கு எதிராக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் கணேஷ் மட்டுமல்லாமல் அவரின் நண்பர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *