என் அன்பிற்குரிய காவலர்களே… சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உருக்கம்

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏடிஜிபி ஆபரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல் துறையினருடைய சிறப்பான பங்களிப்பு மூலம் சென்னை பொதுமக்கள் நம் மீது ஒரு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கு காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுடைய உழைப்பையும் திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி பணியாற்றி உள்ளீர்கள். குறிப்பாக சிசிடிவி உள்ளிட்ட பல தொழில்நுட்பகளைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு நீங்கள் சிந்திய வியர்வைவை நான் இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன். நம்மை நாடி வருகின்றன மனுதாரர்களை மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டுமென்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்து கொண்ட விதத்தால் காவல் துறைக்கு பொதுமக்களிடமிருந்த அன்பும் நன்மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.
தீபாவளி, பொங்கல் விழா மற்றும் சர்வதேச மகளிர் தினம் போன்ற விழாக்களை காவலர் குடும்பத்துடன் கொண்டாடிய நாள்கள் என்னென்றும் மனதில் நிலைத்து நிற்கும்.
சவாலான பல்வேறு சூழ்நிலையிலும் கொரோனா காலத்திலும் நீங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.
நான் விடைபெறும் நேரத்தில் மீண்டும் உங்களை அதே பொறுப்புணர்வுடனும் கடமையுணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொண்டு சென்னை பெருநகர காவல் துறையின் மாண்பினை மேலும் வலுப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *