வாடகைதாரர் விவரங்களை அளிக்க போலீஸ் நிலையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை, வீட்டின் உரிமையாலர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தனி விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் போலீஸ் நிலையங்களில் விநியோகிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாடகைதாரரின் புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும். வாடகைதாரரின் ஏதாவது ஓர் அடையாள அட்டை ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.