“பாலிவுட் நடிகருடன் காதல்; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை” – சென்னை பட்டதாரியின் ரியல் ஸ்டோரி

ஊரடங்கில் குப்பை தொட்டியின் அருகே குப்பைகளோடு குப்பையாக படுத்திருந்த பாரதிக்கு கொஞ்சம் மனநலம் சரியில்லை. அவரின் கதையக் கேட்ட போலீசாருக்கு கண்ணீரை வரவழைத்தது.

பாரதி
பாரதி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

சென்னை தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது குப்பை தொட்டியின் அருகே அழுக்கான சுடிதார் அணிந்த இளம் பெண் ஒருவர் படுத்திருந்தார். உடனே காரை விட்டு கீழே இறங்கிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அந்தப்பெண்ணிடம் விசாரித்தார்.

அப்போது அந்தப் பெண்ணின் பெயர் பாரதி என்றும் அநாதை என்றும் தெரியவந்தது. இதையடுத்து பாரதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், குளிக்க வைத்து புதிய சுடிதாரை வாங்கி கொடுத்தனர். அப்போது அழகாக காட்சியளித்தார் பாரதி.

யார் இந்த பாரதி?

யார் இந்த பாரதி என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, ரொம்ப வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் பாரதி. அவரின் அப்பா, மத்திய அரசு ஊழியர். குடும்பத்தில் பாரதியையும் சேர்ந்து மூன்று பெண் குழந்தைகள். பாரதி, பிஎஸ்சி படித்துள்ளார். படிக்கும் காலத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் மீது ஒருதலையாக பாரதி காதல் வயப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல் வீட்டில் தெரிந்ததும் பாரதிக்கு புத்திமதி கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. விளைவு, பாலிவுட் நடிகர் மீதான காதலால் பாரதிக்கு பித்து பிடித்தது. பாரதி இப்படி என்றால் அவரின் சகோதரி ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரரை ஒருதலையாகக் காதலித்தார். அந்த வீரருக்கு திருமணநிச்சயதார்த்தம் நடந்ததும் பாரதியின் சகோதரி, தற்கொலை செய்து கொண்டார்.

பாரதி
பாரதி

14 ஆண்டு பிளாட்பார வாழ்க்கை

பாரதிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது திருமண பேச்சுவார்த்தை நடந்தச் சமயத்தில் வீட்டை விட்டு அவர் எஸ்கேப் ஆனார். இது ஒரு தடவை அல்ல. தொடர்கதையானது. அதனால் பாரதிக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தை அவரின் பெற்றோர் கைவிட்டனர்.

அவருக்குப் பதிலாக இன்னொரு சககோதரிக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் சென்னையில் குடும்பத்துமன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருக்கும் வரை பாரதிக்கு ஆதரவு இருந்தது. அதன்பிறகு ஆதரவற்ற பாரதி கடந்த 14 ஆண்டுகளான பிளாட்பாரத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த சோகங்களையும் துன்பங்களும் பாரதிக்கு சொல்லக்கூட தெரியவில்லை.

உதறிய உறவினர்கள்

பாரதி

பாரதியை அவரின் உறவினர்களிடம் சேர்க்க முயற்சி செய்தோம். புளியந்தோப்பில் உள்ள பாரதியின் அத்தை வீட்டுக்கு சென்று தகவலைக் கூறினோம். அப்போது அவர்களுக்கு, பாரதியை சேர்த்துக் கொள்ள மனமில்லை. அடுத்து பாரதியின் சகோதரியிடம் கேட்டபோது அவரும் சம்மதிக்கவில்லை.

அதனால் சென்னை மாநகராட்சி காப்பகத்தில் பாரதியை சேர்த்துள்ளோம். கொரோனா பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டுள்ளது. அந்த ரிசல்ட் வந்தப்பிறகு பாரதிக்கு மனநல சிகிச்சை அளிக்க உதவி செய்யவுள்ளோம். பாரதியின் அப்பாவின் பென்சன் அவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

பாரதியின் வாழ்க்கையில் அக்கறை செலுத்தி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அவருக்கு உறுதுணையாக இருந்த தலைமைக் காவலர் குமரன், ஜான்மனோ, சத்யா, பினோ ஜான் ஆகியோருக்கு தமிழ்நிருபர் டாட் காமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *