தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாநில செயலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டார். அந்த பதவியில் இருந்த ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏ.கே.விஸ்வநாதன், புதிய போலீஸ் கமிஷனரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். சென்னையின் 106-வது போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்றுள்ளார்.