மக்களுக்கு உதவ 353 ரோந்து வாகனங்கள் சென்னையில் வலம் வருகின்றன.
சென்னையில் பொதுமக்களின் அவசர அழைப்பை ஏற்று, அவர்களை தேடி சென்று உதவ போலீஸார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று போலீஸ் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் பொதுமக்களுக்கு உதவ தலா 4 வகையான ரோந்து வாகனங்கள் வலம் வருகின்றன.
இதன்படி மொத்தம் 353 ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் சென்னையை சுற்றி வருகின்றன.
காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு வரும் அழைப்புகளின்பேரில் மக்களின் இருப்பிடத்துக்கே ரோந்து வாகனங்கள் செல்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் குற்ற செயல்கள் குறைந்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.