சென்னை மகளிர் போலீஸாருக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி இன்று அளிக்கப்பட்டது. அதில் உற்சாகமாக மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, நேரடி கண்காணிப்பில் இன்று மகளிர் போலீசாருக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி இணைய தள வழியாக அளிக்கப்பட்டது.

இதில் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறுவர் நல காவல் பிரிவு 1, சிறுவர் நல காவல் பிரிவு 2 மற்றும் ஐயுசிஏடபுள்யு ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முதல் காவலர்கள் வரை 500 பேர் கலந்து கொண்டனர்.

இணையதள மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதால் அவரவர் பணிபுரியும் அலுவலங்களிலிருந்தே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ்நோய் தொற்றிலிருந்து தடுப்பதற்காகவும் தற்காத்து கொள்வதற்காகவும் மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான முக்கிய யோகாசனங்கள், யோக முத்திரைகள் பற்றியும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கான இயற்கை உணவு முறைகள் பற்றியும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கான இயற்கை உணவு முறைகள் பற்றியும் அளிக்கப்பட்டது. மேலும், மூச்சுத்திணறல் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபட தேவையான ஆசனங்கள் குறித்த செய்முறை விளக்கமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிகளை திக்ஷதா யோகா பயிற்சியாளர் பிரியதர்ஷினி மற்றும் முகமது ரிஷ்வான் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *