போலீஸ் எஸ்.ஐ சதீஷ்குமார், சிறுமியின் அம்மா, பெரியம்மா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இந்த வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ சதீஷ்குமார் குறித்து விசாரித்தால் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
போலீஸ் எஸ்.ஐ சதீஷ்குமாருடன் நெருங்கிப் பழகிய ரேவதி, தன்னுடைய மகளை சதீஷ்குமாருடன் சந்தோஷமாக இரு என கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் ரேவதி, அவரின் அக்காள் நிலவழகி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
கைதாகுவதற்கு முன் சிறுமி, அவரின் அப்பா, தம்பி ஆகியோரை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பான வீடியோவும் வெளியாகியிருக்கிறது. விரிவான செய்தியை பார்ப்போம்.

திருமணம்
வடசென்னையைச் சேர்ந்தவர் ரேவதி. இவர், காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ரேவதிக்கு 15 வயதில் ஒரு மகளும் 10 வயதில் மகனும் உள்ளனர். ரேவதியின் கணவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
ரேசன் கடையில் வேலைப்பார்க்கும் ரேவதிக்கும் மாதவரம் துணை கமிஷனர் ஸ்பெஷல் டீமில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகியதை ரேவதியின் மகள் பார்த்துவிட்டார்.
போக்சோ
அதன்பிறகு ரேவதியின் மகளையும் தங்களின் வலையில் வீழ்த்த முடிவு செய்திருக்கின்றனர். ரேவதியின் மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விரும்பியதாகவும் அதற்கு அவர் சம்மதிக்காததால் பாலியல் தொல்லைக்கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறுமியின் அம்மா ரேவதி, பெரியம்மா நிலவழகி ஆகியோர் மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் சிறுமி, அவரின் அப்பாவைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரிலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
ரேவதியின் வாழ்க்கை தடம் புரண்டது எப்படி என சிறுமியின் அப்பா, வழக்கறிஞர் குமரன் ஆகியோர் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.
சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார்
ரேவதியின் கணவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை என்றாலும் கிடைக்கும் வருமானத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்திவந்தனர். தங்களுடைய மகனையும் மகளையும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரேவதிக்கு ரேசன் கடையில் வேலைக்கிடைத்தது. ரேவதியின் அக்காள் நிலவழகி, வடசென்னையில்தான் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார்.
அந்தக் குடும்பத்துக்கும் ரேவதிதான் பொருளாதார ரீதியில் சில உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.
இந்தச் சமயத்தில் கொரோனா முதல் அலையின்போது ரேசன்கடை பாதுகாப்பு பணிக்காக மாதவரம் துணை கமிஷனரின் சிறப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் சதீஷ்குமார் சென்றார்.

அங்கு பணியிலிருந்த ரேவதியுடன் பேசியதிலிருந்தே சதீஷ்குமாருக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறந்து ரேவதியும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர்.
நண்பர் என்று கூறி வீட்டுக்கே சதீஷ்குமாரை ரேவதி அழைத்துச் சென்றிருக்கிறார். தனியறையில் இருந்த இருவரையும் ரேவதியின் மகளான 15 வயது சிறுமி பார்த்து விட பிரச்னை ஆரம்பமாகியிருக்கிறது.
பாலியல் தொல்லை
ரேவதி, அவரின் அக்காள் நிலவழகி ஆகியோர், சதீஷ்குமாரின் விருப்பப்படி நடந்துக் கொள்ளும்படி சிறுமியை கட்டாயப்படுத்திருக்கின்றனர். ஆனால் சிறுமி சம்மதிக்கவில்லை.
தாய், பெரியம்மா முன்னிலையில் தன்னை துப்பாக்கி முனையில் சதீஷ்குமார் மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து மூன்று பேர் மீது சிறுமி புகாரளித்ததும் சதீஷ்குமார் தரப்பிலிருந்தும் ரேவதி, நிலவழகி தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
ஐ போனும் 50000 ரூபாயும்
கணவர், குழந்தைகளைப் பிரிந்துச் சென்று அக்காள் வீட்டில் தங்கியிருந்த ரேவதியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுமி சில தினங்களுக்கு முன் சென்றிருக்கிறாள்.
அப்போது நீ சதீஷ்குமாருடன் வெளியில் செல்ல வேண்டும். அவரின் விருப்பப்படி நடந்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் அவர், ஐ போனும் 50000 ரூபாயும் கொடுத்திருக்கிறார் என சிறுமியை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள் ரேவதியும் நிலவழகியும்.
ஆனால் சிறுமி சம்மதிக்கவில்லை. அப்போது சிறுமியை செருப்பால் தாக்கியிருக்கிறார் நிலவழகி. பின்னர் பைக்கில் வீட்டுக்கு வந்த சிறுமி, அவரின் அப்பாவை நிலவழகி, ரேவதி தரப்பினர் 5 ஆட்டோக்களில் பின்தொடர்நது வந்திருக்கின்றனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை
வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட சிறுமியும் அவரின் அப்பாவையும் கொலை செய்ய அந்தக் கும்பல் முயற்சி செய்திருக்கிறது.
அப்போது போலீஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்த சிறுமி, நடந்தச் சம்பவத்தை லைவ்வாக போனில் காண்பித்திருக்கிறார்.
அதன்பிறகு சமபவ இடத்துக்கு போலீஸார் வந்ததும் அந்தக் கும்பல் தப்பிச் சென்றிருக்கிறது.
அப்போது சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நிலவழகி ஆகியோர் ஆபாசமாக பேசுவது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் நான் ஆம்பள பொறுக்கி என்று கூறும் ஆடியோவும் உள்ளது.
அதை ஆதாரமாக காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளள நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிறுமிக்கும் பாலாஜிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.