நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் ரூ.1,000 அபராதம்

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறி இதர நேரங்களில் பட்டாசு வெடித்தால் ரூ.1,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *