நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால்…கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். தீபாவளி நாளில் கூடுதலாக 500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மக்களின் நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலமும் சென்னை மாநகரம் கண்காணிக்கப்படும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார்.