சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5,000 கோடியில் 2 அடுக்கு மேம்பால சாலை

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5,000 கோடியில் 2 அடுக்கு மேம்பால சாலை கட்டப்பட உள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்பின் அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“சென்னையின் மிக முக்கியமான துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் முதலில் 4 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மேம்பால சாலை திட்டத்தின் புதிய வடிவமைப்பை வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும். இந்த மேம்பால சாலை  2 அடுக்கு மேம்பாலமாக அமையும். முதலில் 4 வழி, அதன்பின் 6 வழி, 8 வழியாக மாற்றும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னையின் வாகன நெரிசல் குறையும். இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.5 கோடியாக உயரும்” என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *