சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பால பணியை பிப்வரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயல்-துறைமுகம் இடையே மேம்பால சாலை அமைக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக அரசு, இத்திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தது. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் திட்டத்துக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. தற்போது திட்டத்துக்கு நிதி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
எனவே வரும் பிப்ரவரியில் சாலை பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.