சென்னை ராஜீவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை ராஜீவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், ஏகாட்டூர் மற்றும் சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

கடந்த 2009 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

கடந்த ஜூலையில் சுஙகச்சாவடி கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னை ராஜீவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் 10 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு வரும் 2022 வரை அமலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *