கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி கொலை

சென்னையில் சகோதரியின் காதல் கணவர் கடந்த சுதந்திரத் தினத்தன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான பிரபல ரவுடி நேற்றிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சகோதரியின் கணவர் கொலை

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 12வது பிளாக்கை சேர்ந்தவர் காளிதாஸ். இவரின் மகன் விஜயதாஸ் (வயது 36). இவரது தாய் இலா மல்லி வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டார்.

விஜயதாஸ் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரின் பெயரில் காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் பெயர் உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விஜயதாஸின் சகோதரி கௌசல்யாவின் கணவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜயதாஸ் கைது செய்யப்பட்டார்.

குண்டாஸ்

இதையடுத்து விஜயதாஸ் மீது குண்டாஸ் போடப்பட்டது. அதனால் சிறையில் அடைக்கப்பட்ட விஜயதாஸ், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். நேற்றிரவு வியாசர்பாடி அசோக்பில்லர் அருகில் விஜயதாஸை சென்றார்.

பிரபல ரவுடி விஜயதாஸ்
பிரபல ரவுடி விஜயதாஸ்

அப்போது அவரை வழிமறித்த மர்மகும்பல், விஜயதாஸை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயதாஸ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயதாஸ் உயிரிழந்தார்.

இதுகுறித்து எம்.கே.பிநகர் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

பிரபல ரவுடி விஜயதாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கொலையாளிகள் குறித்த தகவல் தெரிந்தது.

3 பேரிடம் விசாரணை

அதன்அடிப்படையில் 3 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சகோதரியின் கணவர் கொலைக்காக ரவுடி விஜயதாஸ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறுகாரணமா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

விசாரணை முடிவில்தான் விஜயதாஸ் கொலைக்காக காரணம் தெரியவரும்.

கொலை செய்யப்பட்ட ரவுடி விஜயதாஸிக்கு ரேஷ்மா வயது 35 என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். விஜயதாஸ், சென்னையில் உள்ள பிரபலமான ரவுடி ஒருவரின் கூட்டாளி.

அதனால் விஜயதாஸ் தரப்பினருக்கும் அவரின் எதிர்தரப்பு ரவுடி கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.

அதன்காரணமாக ரவுடி விஜயதாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

விஜயதாஸின் சகோதரியின் கணவர் கடந்த சுதந்திர தினத்தன்று கொலை செய்யப்பட்டார். இந்தாண்டு சுதந்திர தினம் முடிந்த 4-வது நாளில் விஜயதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *