நண்பனின் மனைவியுடன் நட்பு; மருமகனுக்கு பதில் மாமனார் கொலை

நண்பன் சிறைக்குச் சென்றதும் அவனின் மனைவியுடன் ரவுடிக்கு நட்பு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த நண்பன், ரவுடியை கொலை செய்ய வந்தார். ஆனால் அவருக்குப்பதில் ரவுடியின் மாமனாரை கொலை செய்தார்

பிரபல ரவுடி

சென்னை, ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 65) இவரின் மனைவி இந்திரா.

இவர்களின் மகள் ஆதிலட்சுமி. மகள் வீட்டில் புண்ணியகோட்டியும் இந்திராவும் குடியிருந்தனர். ஆதிலட்சுமியின் கணவர் தினேஷ்.

இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தினேஷ், சென்னையில் நம்பர் ஒன் ரவுடி ஒருவரின் கூட்டாளி. கடந்த வாரம் வேளச்சேரியில் நடந்த செயின்பறிப்பு சம்பவத்தில் ரவுடி தினேஷ், கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருக்கும் அவரை கொலை செய்யதான் அவரின் நண்பன் கணேஷ் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தார்.

தினேஷ் வீட்டில் இல்லை என்றதும் புண்ணியகோட்டியை கணேஷ் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குமரன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணேஷை தேடிவருகின்றனர்.

புண்ணியகோட்டியின் சடலத்தை மீட்ட போலீஸார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பிரேத பரிசோதனை முடிந்து அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ரவுடி தினேஷை ஏன் கணேஷ் கொலை செய்ய வந்தார் என்று போலீஸார் விசாரித்தனர்.

நண்பர்கள்

தினேஷிம், கணேஷிம் நண்பர்கள். இந்தச் சமயத்தில் கணேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணேஷின் மனைவிக்கு உதவி செய்ய தினேஷ் அடிக்கடி வீட்டுக்குச் சென்றார். அப்போது கணேஷ் மனைவிக்கும் தினேஷிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அதனால் கணேஷ் மனைவி, வீட்டை விட்டு வெளியேறினார். இந்தச்சூழலில் கணேஷ் சிறையிலிருந்து வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்றபோது கதவு பூட்டியிருந்தது.

அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது மனைவி குறித்த தகவல் கிடைத்தது. அதனால் ஆத்திரமடைந்த கணேஷ், தினேஷை கொலை செய்ய கத்தியோடு ஜாபர்கான் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் தினேஷ் சிறைக்குச் சென்ற தகவல் கிடைத்தது.

தினேஷ் வீட்டிலிருந்து அவரின் மாமனாரிடம் நடந்த விவரத்தை கணேஷ் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணேஷ், புண்ணியகோட்டியை கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

தலைமறைவாக இருக்கும் கணேஷ் எங்கு இருக்கிறார் என்று போலீஸார் தேடிவருகின்றனர். இதற்கிடையில் மாமனாரை கணேஷ் கொலை செய்த தகவலை தெரிந்த தினேஷ் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குமரன்நகர் போலீஸார் கூறுகையில், “ரவுடி தினேஷ் தன்னுடைய நண்பன் கணேஷ் சிறைக்குச் சென்றதும் அவரின் மனைவியிடம் முதலில் நட்பாக பழகியுள்ளார். பின்னர்தான் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

மனைவியின் மனதை ரவுடி நண்பனே மாற்றியது கணேஷிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது அதுதான் இந்தக் கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.”என்றனர்.

நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பில் ரவுடியின் மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *