சென்னை-சேலம் இடையே பயணிகள் விமான சேவையை ட்ரூஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாரத்தில் 3 நாட்கள் விமான சேவை இயக்கப்பட்டது.
இந்நிலையில் நவ. 29 ஞாயிற்றுக்கிழமை முதல் தினசரி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்துக்கு காலை 8.15 மணிக்கு வந்தடையும். சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு 9.35-க்கு வந்தடையும்.