சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம்

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை-சேலம் இடையே 276 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ரத்து செய்தது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

“புதிய அறிவிக்கையை வெளியிட்டு மீண்டும் நிலங்களை கையகப்படுத்தலாம்.  எட்டு வழிச்சாலை திட்டத்தில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *