சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள்

தீபாவளிக்காக சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கல் இயக்கப்படுகின்றன. மாதவரம் புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் புதிய பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளியையொட்டி சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூர சிறப்பு பஸ்கள் புறப்படும் பஸ் நிலையங்களுக்கு இணைப்பு பஸ்களாக இவை இயக்கப்பட்டு வருகின்றன. நவ. 11, 12, 13-ம் தேதிகளில் 24 மணி நேரமும் சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *