`என்னை மன்னிச்சிரு;அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன்’-ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை

அமைந்தகரை, டி.பி. சத்திரம் பகுதியில் தனது தம்பியுடன் வசித்து வந்தவர்நித்திஷ்குமார்(20), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் செனாய் நகர் மூன்றாவது குறுக்கு பகுதியில் உள்ள உடலில் டாட்டூ குத்தும் கடையில் வேலை செய்து வந்தான். நேற்று இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கடைக்கு சென்றான்.

காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை செல்போனும் எடுக்காததால் அவரது தம்பி கடைக்கு வந்து பார்த்தபோது நித்திஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த நித்திஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர் மேலும் நித்திஷ் குமார் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

நித்திஷ்குமார்
நித்திஷ்குமார்

நித்திஷ் குமார் “கேஸ்டோ கிளப்” என்கிற ஆன்லைன் விளையாட்டில் விளையாடி வந்ததாகவும் அதில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் என்னோட இந்த முடிவுக்கு காரணம் வேறு யாரும் இல்லை நான் தான். மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த என்னோட காசு எல்லாம் நான் விளையாட்டில் தோற்றுவிட்டேன்.

கடையில இருந்தும் ரூ.20 ஆயிரம் எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் ஆகிவிட்டேன் நான் எடுக்கிற முடிவு தப்பு தான் எனக்கு வேற வழி தெரியல என்ன மன்னிச்சிடுங்க சேகர் அன்னா, உங்களை கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன்.

அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் மன்னிச்சிடுங்க சத்யா என்னோட காதலி, என் உயிரே எல்லாமே அவதான் என்னை மன்னிச்சிரு சத்யா அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன் அழுகாத வீட்ல உனக்கு நல்ல லைஃப் அமைச்சி கொடுப்பாங்க என்னோட போன் பாஸ் வேர்டும் இதுதான்.

எல்லோருக்கும் தகவல் கொடுங்க முக்கியமாக சத்யாவுக்கு அவ பேரு ராட்சசின்னு பதிவு பண்ணி இருக்கேன். கடைசியா அவ என்னை பார்த்ததும் என்ன தூக்கிட்டு போங்க எல்லாருக்கும் சாரி, பணம் வென்றது என் தம்பிய நல்லா பாத்துக்கங்க என அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *