கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக அந்தந்த ரயில் நிலையங்களில் புதிய கால அட்டவணை ஒட்டப்பட்டிருக்கிறது. வரும் 19-ம் தேதி வரை புதிய கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ரயில் சேவைகள் தொடரும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *