சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படவில்லை. தற்போது ரயில்வே ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்காக மட்டுமே சிறப்பு புறநகர் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையை வழக்கம்போல தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புறநகர் ரயில்களை இயக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியவுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. எனவே ரயில்வேயின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.