சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்

சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, மாநகர பஸ் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் புறநகர் மின்சார ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி அருள் ஜோதி விளக்கம் அளித்துள்ளார்.
“சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.

அவ்வாறு ரயில் சேவை தொடங்கும்போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்று அருள் ஜோதி தெரிவித்தார்.

சென்னையில் தற்போது ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வழக்கமான புறநகர் ரயில் சேவையும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *