புறநகர் ரயில் சேவை நவ. 1 முதல் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போதுமுதல் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படவில்லை. தற்போது ரயில்வே ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் புறநகர் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதினார். இதை ஏற்று வரும் நவ. 1 முதல் சென்னை புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.