சென்னை மின்சார ரயில்களின் சேவை 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் தனியார் துறையை சேர்ந்த அத்தியாவசிய பணி ஊழியர்களும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சிறப்பு ரயில்களின் சேவை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை-தாம்பரம், கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-அரக்கோணம், கடற்கரை-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் குறித்த அட்டவணை ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.