சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் இதர பகுதிகளில் மே 7-ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்) திறக்கப்பட்டன.
ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் இயங்கும்.காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும்.
நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மால்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் மதுபான கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.