`அவள் கோழையல்ல’ – சென்னையில் ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் சடலம்

சென்னையில் காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, புவனேஸ்வரி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள். மனவேதனையடைந்த புவனேஸ்வரி, தன்னுடைய 8 மாத குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

27-ம் தேதி புவனேஸ்வரியின் சடலம் சேக்காடு ஏரியிலிருந்து மீட்கபட்டது. குழந்தை தபித்தாலின் சடலத்தை போலீஸார் தேடிவந்தனர். 5 நாள்களுக்கு பிறகு ட்ரோன் மூலம் போலீஸார் குழந்தையின் சடலத்தை தேடினர். அப்போது குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து குழந்தை தபித்தாலை கொலை செய்து விட்டு புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என ஆவடி போலீஸார் தெரிவித்தார்.

சிறிது காலம் ஆசிரியையாக பணியாற்றி புவனேஸ்வரி, நன்றாக படிப்பாள். தைரியமான பொண்ணு என சேக்காடு பகுதி மக்கள் கூறும் நிலையில் ஏன் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. 2 குழந்தைகளை வீட்டில் விட்டுச் சென்ற புவனேஸ்வரி, தன்னுடைய கடைசி மகளான கைக்குழந்தை தபித்தாலை ஏன் கொலை செய்தார் என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். புவனேஸ்வரி எழுதி வைத்துள்ள டைரியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்க்கும் போது புவனேஸ்வரி வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆவடி போலீஸார் கூறுகையில், புவனேஸ்வரியின் தம்பி செல்வம், தன்னுடைய அக்காளை அவரின் கணவர் சந்தேகப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது புவனேஸ்வரி, அவரின் குழந்தை தபித்தாலின் சடலங்களை மீட்டுள்ளோம். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் தண்ணீரில் மூழ்கிதான் இருவரும் இறந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அதனால் குழந்தையோடு ஏரிக்குள் புவனேஸ்வரி சென்றிருக்கலாம் என கருதுகிறோம். வீட்டை விட்டு வெளியில் சென்ற புவனேஸ்வரி தன்னுடைய குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. ஆனால் அவர் ஏரிக்கரை பகுதிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் எதுவும் சிக்கவில்லை.

அதனால் புவனேஸ்வரியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். வீட்டை விட்டு புவனேஸ்வரி செல்லும்போது அவரின் வீட்டில் யாரும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களே புவனேஸ்வரியை இந்த முடிவை எடுக்க காரணமாக இருக்கிறது என்றனர்.

புவனேஸ்வரியின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள்,“ தீக்குளித்த பிறகு உடலளவில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்த புவனேஸ்வரி, கணவரின் செயல்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாள். விரக்தியடைந்த அவள் சில நேரங்களில் தனக்குத் தானே பேசு கொள்வாள். இரவு நேரங்களில் கணவனும் மனைவியும் வாக்கிங் செல்வார்கள். இருவரும் தெருவில் சண்டை போட்டுக் கொள்வார்கள். அப்போது புவனேஸ்வரியின் கணவர், தகாத வார்த்தைகளால் அசிங்கமாக மனைவியை திட்டுவார். ஆனால் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு புவனேஸ்வரி கோழை இல்லை “என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *