வெள்ளை கோட்டை தாண்டினால் ரூ.100 அபராதம்

சென்னை சாலைகளில் வெள்ளை கோட்டை தாண்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர். 

சென்னை சாலைகளின் போக்குவரத்து சிக்னல்களில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து போலீஸார் வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். இனிமேல் சிக்னல்களில் வெள்ளை கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். வழக்கும் பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சிக்னல்களில் சிவப்பு சிக்னலை மீறி செல்பவர்களால் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.  இதை தடுக்க சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *