ஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சாலைகளின் சிக்னல்களில் விதிமீறல் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஆற்காடு சாலை, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் சிக்னல்களில் வாகனஓட்டிகளுக்கு போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஸ்டாப்லைனை தாண்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினார். இனிவரும் காலங்களில் சிக்னல் ஸ்டாப் லைனை தாண்டி நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.