தொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ

வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ப.ரங்கநாதன், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த செலவிலும் செய்து கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ப.ரங்கநாதனிடம் தமிழ் நிருபர் டாட் காம் நடத்திய சிறப்பு நேர்காணல்.

ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ

கடந்த 5 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் நீங்கள் செய்த பணிகள் குறித்து கொஞ்சம் விவரமாக சொல்லுங்க.

வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ரெட்ஹில்ஸ் சாலையில் 40 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகாரளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்த தொகுதியிலிருக்கும் ஆதிதிராவிட விடுதி சீரமைத்திருக்கிறேன். 94-வது வார்டில், பாபாநகர், ராஜமங்கலம் அருகில் பாதாள குடிநீர் குழாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். பாபாநகர் 2-வது பிரதான சாலையில் தேங்கியிருந்த கழிவு நீர் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகளைச் செய்திருக்கிறேன். 95-வது வட்டத்தில் ஏசியன் அப்பாட்மென்ட் குடியிருப்பில் கழிவுநீர் அடைப்பு பிரச்னை தீர்வு காண பிரதான கால்வாயான ஓட்டேரி நல்லா கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பு பணிகளை செய்திருக்கிறேன். 94-வது வட்டம் சிட்கோ நகர் அரசு சத்துணவு கூடத்துக்கு அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன்.

ரங்கநாதன் எம்.எல்.ஏ பணிகளை ஆய்வு செய்கிறார்

அமைதிப் பூங்கா

95-வது வட்டம், சிட்கோ நகர் முதல் ஓட்டேரி நல்லா பிரதான இணைப்பு கால்வாயிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். மேலும் புதிய கால்வாய் கட்டப்பட்டிருக்கிறேன். அதன்மூலம் சிட்கோ நகரில் மழை நீர் அங்கு தேங்குவதில்லை. 95-வது வட்டம், சிவசக்தி காலனியின் டி.வி.எஸ் கால்வாயை தூர்வாரியிருக்கிறேன். வில்லிவாக்கம் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரிலிருக்கும் மயானத்துக்கு அமைதி பூங்கா என பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே?

94-வது வட்டத்தில் 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காவை திறந்து வைத்திருக்கிறேன். அதே வட்டத்திலிருக்கும் சுடுகாட்டில் காரியமேடை மற்றும் நவீன எரியூட்டும் இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் 8, வார்டு 94-ல் உள்ள வில்லிவாக்கம் மயான பூமிக்கு அமைதி பூங்கா என்ற பெயரிட்டு பணிகள் நடந்து வருகிறது. அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். பூங்காவின் சுவரில் ஓவியங்கள் வரைய நடவடிக்கை எடுத்திருக்கிறேன். எல்.இ.டி விளக்குகள் மற்றும் நடைபாதை பூங்கா அமைத்திருக்கிறேன்.

தேங்கிய மழை வெள்ளத்தை ஆய்வு செய்யும் ரங்கநாதன் எம்.எல்.ஏ

சொந்த செலவில்…

வில்லிவாக்கம் தொகுதியிலிருக்கும் கோயில்களிலும் சீரமைப்பு பணிகள் செய்ததாக பக்தர்கள் கூறுகிறார்களே?

வில்லிவாக்கம் சௌமிய தாமோதர பெருமாள் கோயிலின் நந்தவனம் முட்புதர் மண்டிகிடப்பதாக பக்தர்கள் என்னிடம் கூறினர். பக்தர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று மக்களோடு இணைந்து முட்புதராக இருந்த நந்தவனத்தை சொந்த செலவில் சுத்தம் செய்தேன். தற்போது நந்தவனத்திலிருந்துதான் பூஜைக்கு பூக்கள் கொண்டு செல்கிறார்கள். குளக்கரையையும் தூர்வாரியிருக்கிறேன்.

தொகுதியிலிருக்கும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருக்கிறதா ?

95-வது வார்டிலிருக்கும் மன்னடி ஒத்தவாடை தெருவில் உள்ள வளையான்குளத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 92,50,000 ரூபாய் செலவில் பழுதடைந்த கரைகளை சீர்செய்து படிகட்டுகள், மின்விளக்குகள் அமைத்திருக்கிறேன். இதுதவிர இன்னும் சில நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மக்களின் குடிநீர் தேவைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ

திருவள்ளூவருக்குச் சிலை

வில்லிவாக்கம் தொகுதியில் சாலை வசதிகள், மின்விளக்குகள், கால்வாய் பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா?

வில்லிவாக்கம் தொகுதியில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமிக்கடியில் 30 கி.மீட்டர் தூரத்திற்கு மின் கேபிள்கள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஐசிஎஃப் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வரப்பட்டு அகலப்படுத்தப்பட்டிருக்கிறேன். 95-வது வார்டிலிருக்கும் விளையாட்டு மைதானம் சீரமைத்திருக்கிறேன். 95-வது வார்டில் சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகளை அகலப்படுத்தி தெருவிளக்குகள் பொருத்தியிருக்கிறேன். கஜா புயலின்போது 95-வது வார்டில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றி மீட்பு பணிகளை மேற்கொண்டேன்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட இடங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டேன். அயனாவரம் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் களஆய்வில் ஈடுபட்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தேன். அயனாவரம் பாலவாயல் சாலையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40,00,000 ரூபாய் செலவில் கலையரங்கம், சத்துணவு கூடம், இருப்பு அறை, உணவு சாப்பிட கொட்டகை ஆகியவை அமைத்திருக்கிறேன். வில்லிவாக்கம் தொகுதியில் அமைந்துள்ள ராஜா தெருவில் தொடர்ந்து ஏற்பட்ட மின்பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய மின்மாற்றி அமைத்திருக்கிறேன். 98-வது வட்டத்தில் திருவள்ளூவர் நகரில் வள்ளூவருக்கு என் சொந்த செலவில் சிலை வைத்திருக்கிறேன். . 95-வது வட்டத்தில் திருநகர் பகுதி பூங்காவில் புல்வெளி சுற்றி கம்பிவேலி மற்றும் சுற்றுச்சுவர் ரூ.18 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திருக்கிறேன்.

மழை வெள்ளத்தைப் பார்வையிடும் ரங்கநாதன் எம்.எல்.ஏ

கொரோனா காலக்கட்டத்தில்…

கொரோனா காலக்கட்டத்தில் தி.மு.க. தலைமை அறிவித்த திட்டத்தை `ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் எப்படி செயல்படுத்தினீர்கள்?

கொரோனா காலக்கட்டத்தில் தி.மு.க.தலைமை ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்தார். உடனடியாக கொரோனாவால் வேலை வாய்ப்புகளை இழந்து வீடுகளில் பசியால் முடங்கியிருந்த மக்களை நேரில் சந்தித்து அரிசி, மளிகை பொருள்கள் ஆகியவற்றை வழங்கினேன். கட்சி நிர்வாகிகள் மூலம் வில்லிவாக்கம் முழுவதும் கொரோனா நிவாரண பணிகளை செய்தோம். தி.மு.க வின் இந்த உதவி பொதுமக்களிடம் முழுமையாக சென்றடைந்தது. இதுதவிர இயற்கை இடர்பாடுகள் காலக்கட்டத்திலும் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருக்கிறேன். இந்த தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறேன்.

அ.தி.மு.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுவதோடு கோஷ்டி பூசலும் ஏற்பட்டிருக்கிறது. இது, தி.மு.கவுக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது. மூத்த அரசியல்வாதி மற்றும் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான ப.ரங்கநாதனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் அவரை வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க தலைமை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *