நிவர் புயலால் சென்னையில் கனமழை பெய்தது. அதனால் தண்ணீர்தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் திமுகவைச் சேர்ந்த வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ப.ரங்கநாதன், தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்தார். அதோடு தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுத்தார்.

சென்னையில் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் நிரம்பின. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டன. மக்களை மிரட்டிய நிவர் புயலால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்தேங்கின. குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. மீட்பு பணியில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூகஆர்வலர்கள் ஈடுபட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியை பொறுத்தவரைக்கும் பாபாநகர், மேற்கு, தெற்கு ஜெகன்நாதன் தெரு, ராஜமங்கலம் வள்ளியம்மாள் நகர், அம்மன்குட்டை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதனால் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொட்டும் மழையில் குடையைப்பிடித்தப்படியே வில்லிவாக்கம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வான ரங்கநாதன், மழை நீர் தேங்கிய பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் அரசு அதிகாரிகள், திமுக பிரமுகர்கள், நிர்வாகிகள் உடன் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருள்களை உடனடியாக எம்.எல்.ஏ ரங்கநாதன் வழங்கினார். மேலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவிட்டார்.
வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புயலால் சரிந்த மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் ராட்சத மின்மோட்டார் மூலம் தேங்கியிருந்த மழை தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் மழைக்கு முன்பே தண்ணீர் தேங்கும் சிட்கோ நகர் பகுதியில் எம்.எல்.ஏ – ரங்கநாதனின் முயற்சியால் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது. அதனால் இந்த மழைக்கு அங்கு அதிகளவில்ல தண்ணீர் தேங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் பணியில் மக்களுக்கு தேவைகளை உணர்ந்து செயல் படும் மாபெரும் சேவகர் அண்ணன் ப.ரங்கநாதன் MLA அவர்கள்
பணி தொடர வாழ்த்துகள் அண்ணா
மக்கள் பணியில் மக்களுலுடன் சேவை செய்வதி திறம்பட மக்கள் சேவகன் வில்லிவாக்ம் சட்டமண்ற சேவகன் அவர்கலின் மக்கள் பணி தொடர்ந்திட அண்ணன் னுக் வாழ்த்துக்கள்