தூக்கில் தொங்கியபடியே, தீக்குளித்தாரா? சென்னை தனலட்சுமி மரணத்தில் மர்மம்

சென்னை அண்ணாநகர் கிழக்கு, என்.பிளாக், 27-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (60), இவர் தன்னுடைய மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு பாத்ரூம் சென்றுவிட்டு வருவதாக கூறி அவரின் அறைக்கு சென்றுள்ளார் தனலட்சுமி. அதன்பிறகு அவரின் அறையிலிருந்து புகை வந்துள்ளது.

பாத்ரூமில் புகை


அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அங்கு சென்றனர். அப்போது பாத்ரூம் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.உள்ளே இருந்து புகை வந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில், தனலட்சுமியின் உடல் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது.


உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தனலட்சுமியின் மரணம் குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் சந்தேகம்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், “தனலட்சுமி, தூக்குப்போட்டும் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தூக்கில் தொங்கிய ஒருவர், எப்படி தீக்குளிக்க முடியும் என்று விசாரித்து வருகிறோம். தனலட்சுமி தற்கொலை செய்துக் கொண்ட பாத்ரூமை ஆய்வு செய்து வரு கிறோம்”என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *